ரசிகர்களைக் கவர்ந்த மெலடி
நயன்தாரா, கவின் இணையும் "ஹாய்' படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகிறது.
நயன்தாரா, கவின் இணையும் "ஹாய்' படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகிறது.
"கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே...' எனத் தொடங்கும் கலக்கலான காதல் மெலடி, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகி, ஜி.வி. பிரகாஷின் குரலில் உயிர் பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதை வருடும் ஒரு மென்மையான காதல் பாடலாக இது உருவாகியுள்ளது.
கேட்க கேட்க இதமாக மனசைத் தொடும் இந்தப் பாடல், அதன் கவித்துவமான வரிகளாலும், துள்ளலான மெலடியாலும் ரசிகர்களை உடனே கவர்ந்து விடுகிறது. காட்சியமைப்பிலும் பாடல் தனி மெருகு பெற்றுள்ளது.
Advertisement
இசட் ஸ்டூடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ், 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை விஷ்ணு எடவன் எழுதி இயக்குகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் விஷ்ணு எடவன். நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்பக் கதையில் காதலைச் சொல்லும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. முதல் பாடல் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டி வருகிறது.