FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சராசரி குடும்ப வாழ்வு

சில்வர் டச் இந்தியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "இறுதி'.

பகிர்:

சில்வர் டச் இந்தியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "இறுதி'. திரைக்கதை எழுதி இயக்கி நடிக்கிறார் சிவ்குமார் நாயர். கதாநாயகியாக நயானசிரி நடிக்கிறார்.

குலாப் புள்ளி லீலா, வி. கே. ரகுநாதன், காந்தராஜ், அலிசா உசா நாயுடு, சாய் ரத்னா உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். செüந்தர்யன், மோகன்ராம் இசையமைக்கிறார்கள். முருகன்மந்திரம் பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவாளராக ராஜேந்திரன் பணியாற்றுகிறார். நடன அமைப்புகளை ரமேஷ் ரெட்டி கவனிக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் பேசும் போது, ""ஒரு சராசரி குடும்பத்தின் வாழ்வுதான் கதை. இதை நம் சமகாலத் தமிழ்ச் சூழலில் வைத்துப் பார்த்தேன். அதிலுள்ள முகமூடிகளை எளிமையான சம மனிதர்களுக்கும் போய்ச் சேர்க்கும் முயற்சியாக வந்து சேர்ந்திருக்கிறது படம்.

Advertisement

Advertisement

அன்பும் போராட்டமும் மட்டுமே இந்த மானுடத்தின் நிரந்தரம். அது ஒரு போதும் வற்றிப் போவதே இல்லை. ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கிற சம்பவங்கள் எப்படி எல்லாம் அந்தக் குடும்பச் சூழலை மாற்றுகிறது என்பதுதான் திரைக்கதை.

இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற மாதிரி சொல்லி இருக்கிறேன். கேரளா, சித்ராஞ்சலி ஸ்டூடியோ, உதகை, ஏற்காடு, சென்னை ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது . இது மக்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பை ஏற்படுத்தும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments