ஹீரோயின் லைன் அப்!
கதாநாயகிகளாக விளங்கும் கயாடு லோஹர், மமிதா பைஜு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் அடுத்தடுத்த லைன் அப்-களை இங்கே பார்க்கலாம்...
கதாநாயகிகளாக விளங்கும் கயாடு லோஹர், மமிதா பைஜு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் அடுத்தடுத்த லைன் அப்-களை இங்கே பார்க்கலாம்...
கீர்த்தி சுரேஷ்
ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளிலும் தனிக் கவனம் செலுத்துகிறார் கீர்த்தி. நயன்தாரா, த்ரிஷா எனப் பலருக்கும் ஹீரோயின் சென்ட்ரிக் கைகொடுக்காத நிலையில், கீர்த்தி சுரேஷ், ஆண்ட்ரியா என ஒருசிலர் மட்டுமே இந்த ஜானரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
Advertisement
அதிலும் அறிமுக இயக்குநர்களின் படங்களில் அதிக ஸ்கோர் எடுத்துவருவதால், "ரகு தாத்தா', "ரிவால்வர் ரீட்டா', "கண்ணிவெடி' எனத் தொடர்ந்து அவருக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறார். அடுத்த ஹீரோயின் சென்ட்ரிக், "கண்ணி வெடி.' அறிமுக இயக்குநர் கணேஷ்ராஜ் இயக்குகிறார். "டாணாக்காரன்' படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். "டாணாக்காரன்' மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தில் கீர்த்தியுடன் விஜே.ரக்ஷன், நமீதா கிருஷ்ணமூர்த்தி எனப் பலர் நடித்துவருகிறார்கள். இயக்குநர்கள் ராம், ஹரி இருவரின் பட்டறையில் இருந்து வந்தவர் இதன் இயக்குநர் கணேúஷ்ராஜ்.பாலிவுட்டில் "தெறி' ஹிந்தி ரீமேக்கில் வருண் தவான் ஜோடியாக கீர்த்தி அறிமுகமாக இருக்கிறார் எனச் சொல்லப்பட்ட நிலையில், இப்போது பாலிவுட் வெப்சிரீஸில் கால்பதிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. ராதிகா ஆப்தேவுடன் இணைகிறார்.
அந்த வெப் சீரியஸ் தமிழில் "அக்கா' எனவும் வருகிறது. ஆக்ஷன் த்ரில்லரான இந்தத் தொடரை அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இயக்கி வருகிறார்.
மமிதா பைஜு
நடிகை மமிதா பைஜுதான் தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷன். அடுத்தடுத்து பெரிய நட்சத்திரங்களின் படங்களில் கமிட்டாகி, பட்டாம்பூச்சியாய் படப்பிடிப்புக்கு பறந்து வருகிறார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'ப்ரேமலு' திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து, மமிதா பைஜுவை பலருக்கும் பேவரைட்டாக்கியது. இத்திரைப்படம் வெளியான அடுத்த சில மாதங்களிலேயே பிஸியான நடிகையாக வலம் வரத் தொடங்கிவிட்டார். தற்போது மமிதா பைஜுவின் லைன் அப்பில் இருக்கும் படங்களின் விவரங்களைப் பார்ப்போம்.
மலையாளத்தில் "சூப்பர் சரண்யா', "ப்ரணய விலாசம்' ஆகிய ஹிட் படங்களில் நடித்த மமிதா பைஜு, தமிழ் சினிமாவில் "ரெபெல்' படத்தின் மூலம் தடம் பதித்தார். மமிதா பைஜு நடிப்பில் தமிழில் இதுவரை ஒரேயொரு திரைப்படம் தான் வெளியாகியிருக்கிறது. ஆனால், அதற்குள் நான்கிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தமிழில் இரண்டாவதாக மமிதா பைஜு கமிட்டான திரைப்படம் "இரண்டு வானம்'. விஷ்ணு விஷாலுடன் மமிதா பைஜு இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். "முண்டாசுப்பட்டி', "ராட்சசன்' ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இப்படத்துக்குப் பிறகு, தமிழில் விஜய்யுடன் "ஜனநாயகன்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். கேரள மக்களுக்கு விஜய்யின் திரைப்படங்கள் எப்போதுமே நெருக்கமானது. அங்கேயும் விஜய்க்கு கணிசமான எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி மமிதா பைஜுவும் விஜய்யின் தீவிர ரசிகர்.
இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதைத் தாண்டி சூர்யாவுடன் அவருடைய 46-ஆவது படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் மமிதா. வெங்கி அத்லூரி இயக்கும் அப்படத்தை டோலிவுட் தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கிறார். இப்படங்களெல்லாம் அவர் நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட படங்கள். இதையும் தாண்டி இன்னும் சில தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுவாகப் பேசப்பட்டு வருகிறது.
கயாடு லோஹர்
தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் "டிராகன்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு ஃபேவரிட்டானவர் நடிகை கயாடு லோஹர். மல்லுவுட்டில் டோவினோ தாமஸýடன் இவர் இணைந்து நடித்துள்ள "பள்ளிச்சட்டம்பி' திரைப்படம் அண்மையில் வெளியாகியுள்ளது. சாய் அபயங்கர் இசையில் வெளியான "பவழ மல்லி' பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
அதில் கயாடு லோஹரின் நடனமும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. இப்படி கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என ஆல் ஏரியாவிலும் கயாடு லோஹரின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. அடுத்தடுத்து ரிலீஸýக்கும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெல்லா - நானி கூட்டணியில் உருவான "தசரா' படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் உருவாகும் படம்
"தி பாரடைஸ்'. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு, கயாடு லோஹரின் லுக் வெளியிடப்பட்டது. இதில் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்த "ஆயா ஷேர்' பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி, அதிரடி ஹிட் அடித்திருந்தது.
தமிழில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக "இம்மார்டல்' படத்தில் கயாடு நடித்து வருகிறார். மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
மேலும், டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், நடிகர் அதர்வாவுடன் இணைந்து 'இதயம் முரளி' திரைப்படத்திலும் கயாடு லோஹர் நடித்து வருகிறார். எக்கச்சக்க நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் வேலைகளும் நடந்து வருகின்றன. இதுதவிர, துல்கர் சல்மானுடன் "ஐ ஆம் கேம்' படத்திலும் கயாடு லோஹர் நடிக்கிறார். இவை அனைத்துமே இந்தாண்டு ரிலீஸýக்கு தயாராகிவருகின்றன.