FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குளத்துச் சுவரில் தினமும் திருக்குறள்

உலகப் பொதுமறையான திருக்குறள், அற இலக்கியமாகும்.

31 அக்டோபர் 2026, 9:25 pm
பகிர்:

உலகப் பொதுமறையான திருக்குறள், அற இலக்கியமாகும். இதனை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தினமும், சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட சங்ககிரி அருள்மிகு சோமேஸ்வரர் கோயிலுக்கு எதிரே, நகராட்சி பராமரித்து வரும் குளத்தின் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டுள்ள கரும்பலகையில் எழுதி வருகிறார், சமூக ஆர்வலர் ராமு என்கிற ராமசாமி.

பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், ரோட்டரி சங்கத்தின் இயற்கைப் பாதுகாப்புப் பிரிவின் மாவட்டத் தலைவரும், வாசவி கிளப்பின் பன்னாட்டு இயக்குநருமான எ.வெங்கடேஸ்வர குப்தா இந்தக் கரும்பலகையை அமைத்தார்.

இதில் 'தண்ணீர் தண்ணீர் அமைப்பு' அறக்கட்டளையின் செயலாளர் செந்தில்குமார் உதவியுடன் கரும்பலகையைச் செப்ப னிட்டு கருப்பு வர்ணம் பூசி, திருக்குறளைத் தொடர்ந்து எழுதி வருகிறார் ராமசாமி.

Advertisement

Advertisement

இந்த ஆர்வம் வந்தது எப்படி? என்பது குறித்து அவரிடம் கேட்டபோது:

'சங்ககிரி ஆசிரியர் காலனியில் வசித்து வருகிறேன். பள்ளிப்படிப்பை சங்ககிரியில் அரசுப் பள்ளிகளிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.காம். படிப்பையும் முடித்தேன். 1985 முதல் 1992-ஆம் ஆண்டு வரை, இடையப்பட்டி கிராமத்துக்கு தனியார் பேருந்தில் சென்று மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகத் தனிப்பயிற்சி வகுப்பு எடுத்தேன்.

சேவை மனப்பான்மையில் ஈடுபாடு கொண்ட நண்பர்கள் ஒன்றிணைந்து தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளையைத் தொடங்கி, சங்ககிரி மலை அடிவாரத்திலிருந்து மலைக்குச் செல்லும் பக்தர்கள் சென்று வரும் பாதைகளைச் சீரமைத்தல், குளங்களைத் தூர்வாருதல், பக்தர்களுக்கு சேவை செய்தல் என்று உதவி வருகிறோம்.

சோமேஸ்வரர் கோயிலுக்கு எதிரே உள்ள குளத்தில் உள்ள கரும்பலகையில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாள்களிலும் திருக்குறள் எழுதி வருகிறேன். அக்டோபர் 2-ஆம் தேதியுடன் 381 நாள்கள் நிறைவடைந்துள்ளது.

பள்ளி மாணவ, மாணவியர், கோயிலுக்கு வரும் பக்தர்கள், தெருவாசிகள் பலரும் இதைப் படிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments