பழைமையான இசைக்கருவி!
இசை என்பது மனிதனை ஆற்றுப்படுத்தும் ஒரு கலை. மனிதன் உருவாக்கிய பழைமையான இசைக்கருவிகளில் ஒன்றாக, 'மவுத்போ' அல்லது 'வாய்வில்' என்று அழைக்கப்படும் நரம்பிசைக் கருவி விளங்குகிறது.
இசை என்பது மனிதனை ஆற்றுப்படுத்தும் ஒரு கலை. மனிதன் உருவாக்கிய பழைமையான இசைக்கருவிகளில் ஒன்றாக, 'மவுத்போ' அல்லது 'வாய்வில்' என்று அழைக்கப்படும் நரம்பிசைக் கருவி விளங்குகிறது.
ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் வாழும் மக்களிடையே பயன்படுத்தப்படும் இந்த இசைக்கருவியை முழுமையாக வாசிக்க, மனித உடலின் ஒரு பகுதியும் இசைக்கருவியுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
Advertisement
Advertisement
இதைப் பற்களுக்கு இடையில் வைத்தோ அல்லது பற்களுக்கு அருகில் வைத்தோ வாசிக்கிறார்கள். அதிரும் நரம்பை வாய்க்கு அருகில் கொண்டு செல்லும்போது, வாய்க்குழி ஒலி அதிர்வு அறைபோல் செயல்படுகிறது. அது வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்ட ஒலிகளைத் தேர்ந்தெடுத்துப் பெருக்குகிறது. அதாவது, வாயின் வடிவத்தை மாற்றுவதன் மூலம் மனித வாயே ஒலி அதிர்வு அறையாகச் செயல்பட்டு, ஓர் எளிய அதிர்வை பல துணை ஒலிகளைக் கொண்ட செழுமையான இசையாக மாற்றுகிறது.
இந்த இசைக்கருவி பண்பாட்டு ரீதியாகவும், சமூகத் தொடர்புகளுடனும் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. பாரம்பரியக் கொண்டாட்டங்கள், வேட்டை, சடங்குகள் உள்ளிட்டவற்றிலும் இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் இது 'நாமுழவு' அல்லது 'முகச்சங்கு' என்று அழைக்கப்படுகிறது. வட இந்தியாவிலும் 'மோர்சிங்' என்ற பெயரிலேயே அறியப்படுகிறது.
இந்த இசைக்கருவியை லாவகமாக வாசிக்க வேண்டும். நிதானம் தவறினால் வாயில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதிமனிதர்கள் கண்டறிந்த பழைமையான இசைக்கருவிகளில் ஒன்றாகக் கருதப்படும் இதை வாசிப்பது சற்றுச் சிரமமானது.