FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திரைக் கதிர்

கத்தாரில் அண்மையில் நடைபெற்ற 'திலீப் ஃபேன்ஸ் அசோசியேஷன்' அமைப்பின் சிறப்பு நிகழ்ச்சியில் மலையாள நடிகர் திலீப் பேசும்போது, கடந்த 10 ஆண்டுகளாகத் தான் அனுபவித்த விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.

18 அக்டோபர் 2026, 4:51 pm IST
பகிர்:

கத்தாரில் அண்மையில் நடைபெற்ற 'திலீப் ஃபேன்ஸ் அசோசியேஷன்' அமைப்பின் சிறப்பு நிகழ்ச்சியில் மலையாள நடிகர் திலீப் பேசும்போது, கடந்த 10 ஆண்டுகளாகத் தான் அனுபவித்த விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.

அதில், 'எனக்கு எந்தவிதச் சம்பந்தமும் இல்லாத ஒரு விஷயத்துக்காக நான் சிறையில் அடைக்கப்பட்டேன். கடந்த 10 வருடங்களாக என் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், என் தரப்பு உண்மையை என் வழியில் எடுத்துச் சொல்லக் கூட முடியாத ஒரு சூழ்நிலையில்தான் நான் தள்ளப்பட்டிருந்தேன்'' என உருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.

நட்சத்திரத் தம்பதிகளான விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும், தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்யை சென்னையில் அண்மையில் நேரில் சந்தித்தனர். முதல்வருடனான இந்தச் சந்திப்பு குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா.

Advertisement

Advertisement

அதில், 'அன்புக்குரிய தளபதி விஜய் சாருடன் மிகவும் அழகான பொழுதை செலவிட்டோம். நாள் முழுவதும் கடுமையான பணிச்சுமை இருந்தபோதிலும், அவர் எங்களை மிகுந்த அன்போடு வரவேற்றார். வாழ்க்கை, பணி மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்த தனது தனிப்பட்ட பார்வைகளைப் பகிர்ந்து கொண்டார்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் 'எஸ்கே 27' படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருக்கிறார் என்று சத்யஜோதி பிலிம்ஸ் தனது 'எக்ஸ்' தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், 'சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக இணைகிறார் சாய் அபயங்கர். 'எஸ்கே 27' படத்துக்கு இசை அமைக்கிறார் சாய் அபயங்கர். இதுவரை கண்டிராத இசைத் திருவிழா உங்களுக்காகக் காத்திருக்கிறது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

'பார்க்கிங்' படத்தைத் தொடர்ந்து அதன் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிவகார்த்திகேயனின் படத்தை இயக்க இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள 'அன்பில் அவன்' படத்தை ஆர்.கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இப்படம் அக்.2}இல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தத் திரைப்படம் குறித்து ப்ரீத்தி முகுந்தன் கூறுகையில், 'ஒரு திரைப்படம் பார்வையாளர்களின் மனதைத் தொட்டு, அவர்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறது என்றால், அதுவே மிகப் பெரிய விஷயம். எனக்குப் பிடித்த சில திரைப்படங்கள் என் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதேபோல, நாங்கள் உருவாக்கிய ஒரு படம் மற்றவர்களின் மனதிலும் அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், அதை வரமாகத்தான் பார்க்கிறேன்'' எனப் பேசியிருக்கிறார்.

'சிக்மா' ஹீரோயினான ஃபரியா அப்துல்லா, சினிமாவைத் தாண்டியும் சிறகடித்து வருகிறார். ராப் பாடகியாகவும் கவனம் ஈர்க்கிறார். ராப் பாடல் எழுதி, பாடிவருவதுடன், இசை விடியோக்களை இயக்கும் பணியிலும் அசத்துகிறார். அண்மையில் ஓர் இசை விடியோவைத் தயாரித்ததன் மூலம் கேமராவுக்குப் பின்னாலான தனது பயணத்தில் முக்கியமான அடியை எடுத்துவைத்திருக்கிறார் ஃபரியா. இவர் நடனத்திலும் இலக்கியத்திலும் ஆர்வமுள்ளவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments