FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திரைக் கதிர்

அஜித் குமார் ரசிகர்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'கிளாடியேட்டர்' ஆவணப் படத்தின் ட்ரெய்லரை பிரத்யேகமாகச் சில திரையரங்குகளில் திரையிட்டிருக்கின்றனர்.

12 செப்டம்பர் 2026, 11:05 pm IST
பகிர்:

அஜித் குமார் ரசிகர்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த "கிளாடியேட்டர்' ஆவணப் படத்தின் ட்ரெய்லரை பிரத்யேகமாகச் சில திரையரங்குகளில் திரையிட்டிருக்கின்றனர். இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் இந்த ஆவணப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ட்ரெய்லரில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி, அஜித்தின் மகளும் மகனும் பேசியிருக்கிறார்கள்.

அதோடு அவருடைய மேலாளரும் நண்பருமான சுரேஷ் சந்திரா, ரேஸிங் குழுவினர் ஆகியோரும் அஜித்தின் ரேஸிங் பக்கம் குறித்துப் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கார் ரேஸ் காட்சிகள், அதில் அஜித்துக்கு ஏற்படும் காயங்கள் என அவரின் ரேஸிங் பக்கத்தின் முக்கியமான நிகழ்வுகளை இதில் பதிவு செய்திருக்கிறார்கள்.

நடிகர் கவினுக்கும் அவருடைய காதலி, மோனிஷாவுக்கும் 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது. இந்தத் தம்பதிக்கு ஜூலை 30 -இல் ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். இந்தத் தகவலை கவின் அப்போதே தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், தற்போது தன் குழந்தைகளுக்குப் பெயர் வைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ""இறைவனுக்கு நன்றி. எங்கள் குழந்தைகளுக்கு "தியோலினா கவின்' என்றும், "தியான் லியோ கவின்' என்றும் பெயர் சூட்டியுள்ளோம்.'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement

Advertisement

முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் "சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2- இல் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜேசன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் என்பதால், இதன்மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் சேலத்தில் நடைபெற்றது. இதில் பேச ஆரம்பிக்கும்போது ஜேசன் சஞ்சய், ""என் குடும்பத்துக்கு நன்றி'' என்று சொல்லியிருக்கிறார். அப்போது அரங்கம் முழுவதும் "டிவிகே... டிவிகே...' என்று மாணவர்கள் ஆரவாரம் செய்திருக்கின்றனர். தொடர்ந்து பேசிய ஜேசன் சஞ்சய், ""சிக்மா நான் இயக்கிய முதல் படம். அனைவருக்கும்

இந்தப் படத்தை கனெக்ட் செய்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன். தியேட்டருக்குச் சென்று ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்'' என்று பேசியிருக்கிறார்.

டோலிவுட்டில் ராசியான ஹீரோயினாகிவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆகையால், தெலுங்குப் படங்களில்தான் அதிகம் கவனம் செலுத்துகிறார். தமிழில் "வடசென்னை' யின் தொடர்ச்சியாக அடுத்த படம் ஆரம்பிக்கும்போது, சென்ற பாகத்தின் தொடர்ச்சியாக அவருக்கு கேரக்டர் கிடைக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பிலும் இருக்

கிறார். அண்மையில் அவர் ரிலீஸ் செய்திருக்கும் போட்டோ ஷூட் வைரலாகியிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் ஐஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments