ஜேசன் சஞ்சய்யின் சிக்மா: அடுத்த பாடல் அறிவிப்பு!
ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படத்தின் இரண்டாவது பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படத்தின் இரண்டாவது பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
சிக்மா படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இப்படத்தின் முதல் பாடலான ‘சிக்மா ஸ்டைல்’ சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்த பாடலான ‘அய்யய்யோ அம்மாடி’ பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஷன் திரைப்படமான சிக்மா வரும் ஜூலை 31 அன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டால் சிக்மா படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
he announcement for the second song from the film *Sigma*, directed by Jason Sanjay, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.