விஜய் - த்ரிஷாவுடன் மோதும் ஜேசன் சஞ்சய்!
அக்டோபர் மாதத்தில் சிக்மா ரிலீஸ், திருப்பாச்சி ரீ-ரிலீஸ் குறித்து...
அக்டோபர் மாதத்தில் முதல்வர் விஜய்யின் திருப்பாச்சி (ரீ-ரிலீஸ்) மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படமும் திரையரங்குகளில் வெளியாகிறது.
முதல்வர் விஜய் - த்ரிஷா நடிப்பில் உருவான திருப்பாச்சி திரைப்படம், கடந்த 2005 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.
திருப்பாச்சியிலிருந்து சென்னைக்குத் திருமணமாகிச் சென்ற தன் தங்கைக்கும், தங்கையின் கணவருக்கும் ரௌடிகளால் பிரச்னை ஏற்பட, அதை தீர்க்கச் செல்லும் அண்ணனாக விஜய் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரூ. 32 கோடி வசூலித்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், படம் வெளியாகி 21 ஆண்டுகளானதையடுத்து அக்டோபர் 1 ஆம் தேதியில் திருப்பாச்சி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. முன்னதாக விஜய் - த்ரிஷா கூட்டணியில் உருவான கில்லி, கடந்தாண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு, மறுவெளியீட்டில் வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில், மீண்டும் விஜய் - த்ரிஷா கூட்டணியில் உருவான திருப்பாச்சி படமும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
இதனிடையே, விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படம் அக்டோபர் 2 ஆம் தேதியில் வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். நடிகர்கள் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முன்னதாக, ஜூலை 31 ஆம் தேதியில் சிக்மா படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், ஜூலை 23-ல் விஜய்யின் ஜனநாயகன் படத்தை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டதால் சிக்மாவின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 2 ஆம் தேதியில் சிக்மா வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இப்போதும்கூட விஜய்யின் திருப்பாச்சி ரீ-ரிலீஸ் செய்யப்படும் அடுத்த நாளிலேயே சிக்மா படமும் திரையரங்குகளில் வெளியாகிறது.
Jason Sanjay's Sigma release and Vijay's Thirupaachi re-release in the same month
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.