FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிக்மா வெளியான பிறகு நடிப்பது பற்றி ஆலோசிக்கிறேன்: ஜேசன் சஞ்சய்

இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது நடிகராகும் விருப்பம் குறித்து பேசியிருப்பதாவது...

18 செப்டம்பர் 2026, 3:09 pm IST
சிக்மா பட புரமோஷனில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் - படங்கள்: எக்ஸ் / ஜேசன் சஞ்சய்
பகிர்:

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் அக்.2ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இயக்குநராக அறிமுகமாகியுள்ள ஜேசன் சஞ்சய்யிடம் நடிப்பது குறித்த கேள்விகள் தொடர்ச்சியாகக் கேட்கப்பட்டு வருகின்றன. இதற்குப் பதிலளித்த அவர், “சிக்மா படம் வெளியான பிறகு நடிப்பது பற்றி ஆலோசிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிடும் சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் ஃபரியா அப்துல்லா நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக உருவான இதில், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது படக்குழு ஹைதராபாதில் புரமோஷன் செய்து வருகிறார்கள். அதில் ஜேசன் சஞ்சய் பேசியிருப்பதாவது:

சிக்மா ஒரு கமர்ஷியல் படம். புதையலைத் தேடுதல் போன்ற கதைக்களத்துடன் இருக்கும். மிகவும் ஜாலியான படமாக இருக்கும். படமாக்கல் குறித்து படிக்கும்போது அனைத்து விதமான துறையினருடன் பணியாற்றும் அனுபவம் கிடைத்தது.

முதலில் நான் சிக்மா படத்தினை வெளியிடுவதில் கவனம் செலுத்துகிறேன். இது வெளியான பிறகு நடிப்பது குறித்து நிச்சயமாக ஆலோசிக்கிறேன். உங்களது தொடர்ச்சியான உத்வேகத்துக்கு நன்றி எனக் கூறினார்.

summary

Jason Sanjay: I will definitely consider exploring acting after Sigma

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments