நல்ல நடத்தை இல்லையென்றால்...
ஒருவகையான நல்ல நடத்தையும் இல்லாமல், கீழானவர்களோடு சேர்ந்தவர்களாக, திரட்சியை உடைய முலைகளை உடையவளது தோளைச் சேரவிரும்பி, முன்பிறவியிலே, தம் வலிமையினால் பிறருடைய மனையாளிடம் சென்ற பாவிகளே.
செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்,
கொம்மை வரிமுலையாள் தோண்மரீஇ-உம்மை
Advertisement
Advertisement
வலியாற் பிறர்மனைமேற் சென்றாரே இம்மை
அலியாகி ஆடிஉண் பார்.
(பாடல் 85 அதிகாரம்: பிறன்மனை நயவாமை)
ஒருவகையான நல்ல நடத்தையும் இல்லாமல், கீழானவர்களோடு சேர்ந்தவர்களாக, திரட்சியை உடைய முலைகளை உடையவளது தோளைச் சேரவிரும்பி, முன்பிறவியிலே, தம் வலிமையினால் பிறருடைய மனையாளிடம் சென்ற பாவிகளே. இந்தப் பிறவியிலே ஆண்தன்மை அற்றுப் போனவர்களாகிக் கூத்தாடிப் பிச்சையெடுத்து உண்பவர்களான பேடிகள் ஆவர்.