பாம்பை தொடுவதற்கு இணையானது
அயலார்கள் எல்லாரும் அலர் எடுத்துத் தூற்றவும், உறவினர் அதனால் நேர்ந்த பழிக்கு அஞ்சியும் அவனுக்கு நேரும் துன்பத்திற்கு அஞ்சியும் வருத்தப்படவும், மயக்கங் கொண்டு அயலானுடைய...

அம்பல் அயலெடுப்ப அஞ்சித் தமர்பரீஇ,
வம்பலன் பெண்மரீஇ, மைந்துற்று, -நம்பும்
நிலைமையின் நெஞ்சத்தான் துப்புரவு, பாம்பின்
Advertisement
Advertisement
தலைநக்கி யன்னது உடைத்து.
(பாடல் 87 அதிகாரம்: பிறன்மனை நயவாமை)
அயலார்கள் எல்லாரும் அலர் எடுத்துத் தூற்றவும், உறவினர் அதனால் நேர்ந்த பழிக்கு அஞ்சியும் அவனுக்கு நேரும் துன்பத்திற்கு அஞ்சியும் வருத்தப்படவும், மயக்கங் கொண்டு அயலானுடைய மனைவியைச் சேர்ந்து, பிறர் நம்பத்தக்க நிலைமையிலே இல்லாத உள்ளத்தை உடையவன் அனுபவித்த இன்பமானது பாம்பினது தலையை ஒருவன் பேதைமையால் நக்கினாற்போன்ற தன்மையை உடையதாகும்.