சிரஞ்சீவியின் காகா வெளியீட்டு போஸ்டர்!
காகா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது..

நடிகர் சிரஞ்சீவியின் 158-வது திரைப்படத்தின் வெளியீட்டு போஸ்டர் பகிரப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான சிரஞ்சீவி தன் புதிய படத்தில் நடிக்கிறார். அவரது 158-வது படமாக உருவாகும் இதனை இயக்குநர் பாபி கொல்லி இயக்க, கேவிஎன் புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதில், அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இறால் பண்ணையில் பணியாற்றும் சிரஞ்சீவி அங்குள்ள தொட்டிகளில் துப்பாக்கிகளை வைத்திருப்பது போன்ற கிளிம்ஸ் விடியோ வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.
தற்போது, இப்படம் அடுத்தாண்டு ஜன. 13 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதை உறுதி செய்யும் விதமாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இது ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் திரைப்படம் என்பதால் சங்காரந்தியை முன்னிட்டு கூடுதல் வரவேற்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.