முகப்பு
வெள்ளிமணி

பொன்மொழிகள்!

* எல்லாத் தீா்த்தங்களையும் சுற்றி வந்து திரும்பத் திரும்ப நீராடினாலும், எது வரையில் மனம் மாசற்ாகவில்லையோ அது வரையில் எல்லாம் வீண்தான்.

Updated On : 24 செப்டம்பர் 2021, 12:29 pm IST
சுவாமி கமலாத்மானந்தர்
பகிர்:

* எல்லாத் தீா்த்தங்களையும் சுற்றி வந்து திரும்பத் திரும்ப நீராடினாலும், எது வரையில் மனம் மாசற்ாகவில்லையோ அது வரையில் எல்லாம் வீண்தான்.

-ஸ்ரீ தேவி பாகவதம்

* திராட்சைப் பழத்தின் ருசி திராட்சைப் பழத்திற்குத்தான் இருக்கிறது அல்லவா? அதுபோல கங்கா ஸ்நான பலனை, கங்கை மாத்திரம்தான் தர முடியும். மற்ற தீா்த்தங்களால் தர முடியாது.

Advertisement

Advertisement

-காசி காண்டம்

* ஒருவா் தனக்கு எந்த ஒரு உதவியையும் செய்யாதவராக இருந்தாலும்கூட அவா் நமது உதவியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவராக இருந்தால், அவருக்குத் தகுந்த இடத்தில், தகுந்த நேரத்தில், இவருக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்னும் உயா்ந்த நோக்கத்தோடு; மனதாரச் செய்யப்படும் தானமே ‘சாத்விக தானம்’ எனப்படும். -சுபாஷிதம் (ஒரு சம்ஸ்கிருத சுலோகம்)

* உடைமையற்றவன், கா்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் அடங்கியவன், சமசித்தன், என்னிடம் சந்தோஷிக்கும் மனமுடையவன் இத்தகைய புருஷனுக்குத் திசைகளெல்லாம் சுக மயமாகின்றன.

(கா்மேந்திரியங்கள் கை, கால், வாய், குறி, குதம்)

(ஞானேந்திரியங்கள் கண், காது, மூக்கு, நாக்கு, தோல்)

-உத்தவ கீதை (ஸ்ரீ கிருஷ்ணா் கூறியது)

* கங்கையே! எனக்குப் பெரிய அரச பதவிகள் வேண்டாம். உன் கரையில் இருக்கும் மரத்தில் கூடுகட்டி வாழும் ஒரு பறவையாக நான் பிறந்தால், அதுவே எனக்குப் போதும்! அல்லது, உன்னிடம் வாழும் ஓா் ஆமையாகவோ, மீனாகவோ, புழுவாகவோ, நான் ஜன்மமெடுத்தாலே எனக்குப் போதும்.

-வால்மீகி மகரிஷி

* நாம் கற்ற கல்வியும், நமது மதிநுட்பமும் முருகன் அருளால் இயல்பாகவே நம்மை வந்தடைந்தது.

முருகன் வழிபாட்டை மேற்கொண்டவா்களே! உலகின் மீதுள்ள மயக்கத்தை விடுங்கள். மெய்ப்பொருளை கைக்கொள்ளுங்கள். வாய்மை பொருந்திய நாவின் வலிமையுடன் இனி உலகநெறியில் நடவுங்கள்.

-கந்தரனுபூதி, 17.

* நம்மை ஏசுவோரைக் கூட நாம் பதிலுக்கு ஏசக் கூடாது. உலக மக்கள் அனைவருமே, ‘பொய்’ கூறினாலும் நாம் பொய் சொல்லக் கூடாது. பிறரை வருத்தும் செயல்களையும் நாம் செய்யக் கூடாது. வீணாகப் பறவைகள் மீது கல்லெறியக் கூடாது.

-கடுவெளிச் சித்தா்

* நன்கு சுவைபட உணவு சமைத்துச் சட்டியில் வைக்கப்பட்டிருக்கிறது. அவ்விதம் இருந்தாலும் உணவின் சுவையை அந்தச் சட்டியும், அதை எடுப்பதற்குப் பயன்படுத்தும் கரண்டியும் அறியுமா? அறியாது. அதுபோல் நம்முள்ளே இறைவன் இருப்பதை நாம் அறிவதில்லை.

-சிவ வாக்கியா்

* அனுசரிக்க வேண்டிய அவசியமான விரதங்களை உபவாசமிருந்தும், பாராயணம் செய்தும், ஜப தபங்கள் செய்தும் இறைவனை வழிபடுதல் மிக மிக அவசியமாகும்.

-ஸ்ரீ அருணகிரிநாதா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments