FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வெள்ளிமணி

அடுத்த ஒரு வாரத்திற்கு.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?

எந்த கோயிலில் என்ன விஷேசம் என்பதைப் பற்றி...

Updated On : 12 ஜூன் 2026, 4:49 pm IST
இரவீஸ்வரர்
பகிர்:

• பழநி மலைக்கோயில் ஸ்ரீமத் போகர் ஜீவ சமாதியில் ஜூன் 12 (வெள்ளிக்கிழமை) அவரது ஜெயந்தி விழா பிற்பகல் 12 மணியளவில் நடைபெற உள்ளது.

• கோவை மாவட்டம், சிறுமுகை, பழத்தோட்டம் அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் வைகாசி கிருத்திகையை முன்னிட்டு ஜூன் 13 (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.

• சென்னை, வியாசர்பாடி அருள்மிகு மரகதாம்பாள் உடனுறை இரவீஸ்வரர் திருக்கோயில் ஆண்டுப்பெரு விழாவில் முக்கிய நிகழ்வாக ஜூன் 13 காலை 8.30 மணிக்கு -கொடியேற்றம், ஜூன் 17 மாலை 7.30 மணிக்கு - பஞ்சமூர்த்திகள் உற்சவம், ஜூன் 19 காலை 8.30 மணிக்கு - திருத்தேர் பெருவிழா, ஜூன் 22 காலை 9 மணிக்கு - தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு - திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

Advertisement

Advertisement

• தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம் அருகே உள்ள திருச்சத்திமுற்றம் சத்திவனேசுவரர் கோயிலில் ஜூன் 13}ஆம் தேதி முதல் 15}ஆம் தேதி வரை முத்துப்பல்லக்கு விழா மற்றும் முத்துப்பந்தல் அளிக்கும் திருவிழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக வரும் ஜூன் 15}ஆம் தேதி (திங்கள்கிழமை) நண்பகல் 12 மணியளவில் திருச்சத்திமுற்றம் அருள்மிகு சத்திவனேசுவரர் திருக்கோயிலிலிருந்து அருள்மிகு தேனுபுரீசுவரர் வழங்கி அருளிய அழகிய முத்துப்பந்தல் நிழலில் மகிழ்ச்சியுடன் திருஞானசம்பந்தர் தேனுபுரீசுவரரை வந்து வழிபடலும், இரவு 8 மணியளவில் அருள்மிகு ஞானாம்பிகை உடனுறையும் அருள்மிகு தேனுபுரீசுவரர் முத்துவிமானத்தில் காட்சியளித்தல், எதிர்வணங்கி திருஞானசம்பந்தர் முத்துப்பந்தல் நிழலில் திருவீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

• ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, மகா சக்திபுரம் எல்லையில் அமைந்துள்ள அருள்தரும் வேதநாயகி உடனாய சுயம்பு ஆதி ஈஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் ஜூன் 14 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருவாசகம் முற்றோதல் பெருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணியளவில் திருவிளக்கு பூஜையும் நடைபெறும்.

• தஞ்சாவூர், மேலவீதி, மூலை அனுமார் கோயிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு ஜூன் 14 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சிறப்புத் திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு நவதானியங்களாலான சிறப்பு அலங்காரமும் நடைபெற உள்ளது.

• கோவை, வெள்ளலூர், அரசண்ணன் கோயில் மண்டபத்தில் ஒரு நாள் தொடர் கீதா பஜன் நிகழ்ச்சி ஜூன் 14 (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற இருக்கிறது.

• ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திரகோச மங்கை அருள்மிகு மங்கள நாதசுவாமி திருக்கோயிலில் ஜூன் 14 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி அளவில் திருவாசக முற்றோதல் நடைபெறும்.

• கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் ஒன்றியம், ஆத்திக்குட்டை ஊரில் எழுந்தருளியுள்ள அத்தித்துறை மாரியம்மன் பெயரில் வள்ளி முருகனைப் போற்றிடும் வள்ளித் திருமணம் பற்றிய கதை சொல்லி வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழா ஜூன் 14 மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.

• சென்னை திருவான்மியூர் ஜெயஸ்ரீ கல்யாண மண்டபத்தில் வான்மியூர் ஈசன் அருட்பணி மன்றம் ஏற்பாட்டில் ஆனி மகம் மணிவாசகர் குருபூஜை விழா ஜூன் 19 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments