இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை: அதிபரின் ஆலோசகர் சாவு
கொழும்பு, அக். 8: இலங்கையில் சனிக்கிழமை உள்ளாட்சித் தேர்தலின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவின் ஆலோசகர் பரத லக்ஷ்மண் பிரேமசந்திரா
கொழும்பு, அக். 8: இலங்கையில் சனிக்கிழமை உள்ளாட்சித் தேர்தலின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவின் ஆலோசகர் பரத லக்ஷ்மண் பிரேமசந்திரா இறந்தார்.
வடகொழும்பின் கோடிகவட்டா பகுதியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 4 பேர் இறந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பிரேமசந்திராவும் பிரேமசந்திராவின் மெய்க்காவலரும் அடங்குவர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
காயமடைந்த 10 பேரில் நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவும் ஒருவர். தலையில் பலத்த காயமேற்பட்ட இவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மார்ச் மாதம் தொடங்கி மூன்று கட்டங்களாக நடந்துவரும் உள்ளாட்சித் தேர்தலின் கடைசி கட்டத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கோடிகவட்டா உள்பட 23 கவுன்சில்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தற்போது கோடிகவட்டா பகுதியில் ஊரடங்கு அமலாகியுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் மாக்ஸி புரொக்டர் தெரிவித்தார்.
தேர்தல் பற்றிக் குறிப்பிட்ட தேர்தல் பார்வையாளர்கள், 55 முதல் 60 சதவீதம் வரை வாக்குகள் பதிவானதாகக் குறிப்பிட்டனர். சட்டத்துக்குப் புறம்பாக கிட்டத்தட்ட 50 சம்பவங்கள் இடம்பெற்றதாக அவர்கள் கூறினர்.
4 ஆண்டுக் காலம் பதவி வகிக்கக்கூடிய 420 உள்ளாட்சி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இத்தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.