FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

மும்பை தாக்குதல்: பாகிஸ்தானில் வழக்கு ஒத்திவைப்பு

இஸ்லாமாபாத், அக்.8: மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது பாகிஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம். மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:19 am IST
பகிர்:

இஸ்லாமாபாத், அக்.8: மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது பாகிஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம்.

மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம். இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 22-ம் தேதி வரை ஒத்திவைப்பதாக நீதிபதி ஷாகித் ரஃபிக் சனிக்கிழமை தெரிவித்தார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி ஸகியூர் ரஹ்மான் லக்வி லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இவ்வழக்கு விசாரணையை லாகூர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும், தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்ற நீதிபதி அரசின் விருப்பப்படி செயல்படுவதால் அவர் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்

Advertisement

Advertisement

ளார்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ரஃபிக், லாகூர் நீதிமன்றம் அக்டோபர் 17-ம் தேதி அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது. லாகூர் உயர் நீதிமன்றம் தன் முடிவை அறிவிக்கும் வரை இவ்வழக்கை தம்மால் விசாரிக்க முடியாது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments