இலங்கையில் நிலச்சரிவு: 7 பேர் சாவு
இலங்கையில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 180 பேர் வீடுகளை இழந்தனர்.
இலங்கையில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 180 பேர் வீடுகளை இழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுவதாவது:
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மத்திய மாகாணமான நுவரெலியாவின் கொத்மலை நகரில் வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 வயதுக் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் மணலுக்குள் புதையுண்டன.
Advertisement
Advertisement
வீடுகளை இழந்த 180 பேர் தாற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் இலங்கையின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் 100 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் கொழும்பில் ஏராளமான முக்கியச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.