FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஹிந்து கோயில் குண்டு வெடிப்பு சம்பவம்:கைது செய்யப்பட்டுள்ளவர் தேடப்பட்டு வந்த மர்ம நபரே: தாய்லாந்து போலீஸார்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலுள்ள பிரம்மன் கோயிலில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர், அந்த வெடி குண்டை கோயிலில் வைத்ததாகத் தேடப்பட்டு வந்த மர்ம நபரே என்பதை அந்த நாட்டுக் காவல்துறை சனிக்கிழமை உறுதி செய்தது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலுள்ள பிரம்மன் கோயிலில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர், அந்த வெடி குண்டை கோயிலில் வைத்ததாகத் தேடப்பட்டு வந்த மர்ம நபரே என்பதை அந்த நாட்டுக் காவல்துறை சனிக்கிழமை உறுதி செய்தது.

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் பிரவுத் தாவோர்ன்சிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவரான ஆதாம் காராடாக்தான், சம்பவத்தின்போது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி போலீஸாரால் தேடப்பட்டு வந்த மஞ்சள் சட்டை அணிந்த நபர் என்பது உறுதியாகியுள்ளது. சாட்சியங்களின் வாக்குமூலம், ஆதாம் காராடாகின் ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவற்றைக் கொண்டு அது உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்ட பிரம்மன் கோயிலுக்கு சனிக்கிழமை அழைத்து வரப்பட்ட ஆதாம் காராடாக், குண்டு வைத்தது எவ்வாறு என போலீஸாரிடம் நடித்துக் காட்டினார்.

பாங்காக்கில் அமைந்துள்ள எரவன் (பிரம்மன்) கோயிலில் கடந்த மாதம் 17-ஆம் தேதி குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

இதில் 20 பேர் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து, அந்தக் குண்டு வெடிப்பு தொடர்பாக ஆதாம் காராடாக் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments