FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆப்கன் உளவுப் பயிற்சி மையத்தில் பயங்கரவாதிகள் முற்றுகை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உளவுத் துறையினருக்கான பயிற்சி மையத்தை துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் வியாழக்கிழமை

30 ஜனவரி 2024, 10:01 pm IST
தாக்குதல் பகுதிக்கு விரையும் பாதுகாப்பு படையினர்.
பகிர்:


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உளவுத் துறையினருக்கான பயிற்சி மையத்தை துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
தலைநகர் காபூலில், உளவுத் துறையினருக்கு பயிற்சியளித்து வரும் தேசிய பாதுகாப்பு இயக்குநரக வளாகத்தில், பயங்கரவாதிகள் வியாழக்கிழமை காலை பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர்.
அதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.
அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தாலும், பயிற்சியக வளாகத்தில் பயங்கரவாதிகள் தொடர்ந்து முற்றுகையிட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபூலில் ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் புதன்கிழமை நடத்திய கொடூரமான தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர்.
அந்த அதிர்ச்சியிலிருந்து ஆப்கானிஸ்தான் மீள்வதற்குள், தற்போது உளவுப் பயிற்சி மையத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, காபூலுக்கு 150 கி.மீ. தொலைவிலுள்ள கஜினி நகரில் அரசுப் படையினருக்கும், தலிபான்களுக்கும் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் கடுமையான சண்டையில், பொதுமக்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments