FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

"பயங்கரவாதத்தில் இருந்து தெற்காசியா விடுபடுவது பாகிஸ்தான் கையில் உள்ளது'

பயங்கரவாதம் மற்றும் வன்முறையின் பிடியில் இருந்து தெற்காசியா விடுபடுவது பாகிஸ்தானின் கைகளில்தான் உள்ளது என்று ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்தியாவுக்கான நிரந்தரத் தூதர் சையது அக்பருதீன்

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

நியூயார்க்: பயங்கரவாதம் மற்றும் வன்முறையின் பிடியில் இருந்து தெற்காசியா விடுபடுவது பாகிஸ்தானின் கைகளில்தான் உள்ளது என்று ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்தியாவுக்கான நிரந்தரத் தூதர் சையது அக்பருதீன் பேசினார்.
நியூயார்க்கில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது பாகிஸ்தானுக்கான ஐ.நா. தூதர் மலீகா லோதியா காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். "மிக நீண்டகாலமாகவே காஷ்மீர் பிரச்னைக்குரிய இடமாக உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் விரும்பும் ஒரு தீர்வை ஐ.நா. அளிக்க வேண்டும். அங்குள்ள மக்கள் ஜனநாயகரீதியில் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டும், பல்வேறு தீர்வுகள் முன்வைக்கப்பட்டும் காஷ்மீர் பிரச்னை இப்போது வரை தொடர்ந்து வருகிறது சோகமான விஷயம் என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அக்பருதீன் பேசியதாவது:
காஷ்மீர் மட்டுமல்லாது தெற்காசியா முழுவதும் அமைதி நிலவுவது என்பது பாகிஸ்தானின் கைகளில்தான் உள்ளது. 
ஏனெனில், பாகிஸ்தான் மண்ணில் இருந்துதான் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததுதான். காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டி விடும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். பாகிஸ்தானில் இப்போது அமைந்துள்ள புதிய அரசாவது இந்த விஷயத்தில் சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். ஏனெனில், பாகிஸ்தானில் இதற்கு முன்பு இருந்த அரசுகள் அனைத்துமே பிரச்னையை பெரிதாக்கி ஆதாயம் தேட முயற்சித்தனவே தவிர, தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவில்லை.
பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்திவிட்டு, தங்கள் நாட்டில் உள்ள பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. 
அது குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும்.  சர்வதேச அரங்கில் பலமுறை நிராகரிக்கப்பட்ட ஒரு விஷயத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஐ.நா.வில் எழுப்பி வருகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments