மனைவிக்காக பதவி துறந்த அமைச்சர்!
மருத்துவராகப் பணியாற்றும் தனது மனைவியின் கனவை நிறைவேற்றுவதற்காக, நார்வே போக்குவரத்துத் துறை அமைச்சர் கெடில் சால்விக்-ஓல்சென் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ஓஸ்லோ: மருத்துவராகப் பணியாற்றும் தனது மனைவியின் கனவை நிறைவேற்றுவதற்காக, நார்வே போக்குவரத்துத் துறை அமைச்சர் கெடில் சால்விக்-ஓல்சென் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது பணிகளைச் சிறப்பாக செய்வதற்கு என் மனைவி டோன் சால்விக்-ஓல்சென் பக்கபலமாக இருந்தார். தற்போது, அமெரிக்காவிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையில் பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. எனவே, அவரது பணிக்கு பக்கபலமாக இருப்பதற்காக நான் ராஜிநாமா செய்கிறேன் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.