மெக்சிகோவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு!
மெக்சிகோவின் ஒசாகா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஒசாகா: மெக்சிகோவின் ஒசாகா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 'மெக்சிகோவின் சாண்டா கேட்ரினா, ஒசாகா ஆகிய நகரங்களில் திங்களன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கடியில் 40 மீட்டர் ஆழத்தில் இருந்தது.' என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக மெக்சிகோவில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்நிலையில் மீண்டும் மெக்சிகோவில் திங்களன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.