அமெரிக்கா: கலிஃபோர்னியாவில் மீண்டும் காட்டுத் தீ
அமெரிக்காவின் கலிஃபோர்னியோ மாகாண வடக்குப் பகுதியில் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியோ மாகாண வடக்குப் பகுதியில் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அந்தப் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அண்மைக் காலமாக வடக்கு கலிஃபோர்னியா பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்படுவதும், அதனால் பெரும் இழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில், தற்போது மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால், பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத் தீ வரும் கோடைக் காலத்தில் மீண்டும் பரவலாம் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.