FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை விதித்த அதிபர் டிரம்பின் முடிவு செல்லும்

ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, யேமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த தடை செல்லும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Updated On : 27 ஜூன் 2018, 3:09 am IST
பகிர்:

ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, யேமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த தடை செல்லும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படும் நோக்கில், இந்த தடை உத்தரவை தாம் பிறப்பித்ததாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
எனினும், குடியேற்றச் சட்டத்தின்படி, அதிபர் தடை விதிக்க அதிகாரம் இல்லை என்று கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
அதை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 4 நீதிபதிகள் டிரம்பின் முடிவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.
குடியேற்றத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரம் அதிபரிடம் இருக்கிறது என்று தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தீர்ப்பளித்தார்.
அதிபரின் முடிவை முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து, இந்தத் தீர்ப்பு அமெரிக்க மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்தார்.
வட கொரியாவிலிருந்து அமெரிக்கா வருவதற்கும், வெனிசுலாவைச் சேர்ந்த சில அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்கா வருவதற்கும் டிரம்ப் தடை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments