FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

கென்யாவில் காய்கறி சந்தையில் தீ விபத்து: 15 பேர் பலி 

கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள காய்கறி சந்தை ஒன்றில் வியாழன் அன்று ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில்  15 பேர் உடல் கருகி பரிதாபமாகப் பலியாகினர்.

Updated On : 28 ஜூன் 2018, 2:58 pm IST
பகிர்:

நைரோபி: கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள காய்கறி சந்தை ஒன்றில் வியாழன் அன்று ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில்  15 பேர் உடல் கருகி பரிதாபமாகப் பலியாகினர்.

கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் பெரிய காய்கறி சந்தை ஒன்று உள்ளது. அந்த சநதையில் வியாழன்  அன்று அதிகாலை திடீர் என தீ பற்றியது. சந்தை உட்பகுதியில் பற்றிய தீ, படிப்படியாக அக்கம்பக்கம் இருந்த கட்டடங்களுக்கும் பரவியது. இந்த தீயில் சிக்கிய 15 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் சிக்கிய கட்டடங்கள் சிதைவுற்று பலவீனமாக இருப்பதால், தீயில் பலியானோரின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள தீயனைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments