அமெரிக்காவுடன் பேச்சு: உறுதி செய்தது தலிபான்
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தலிபான் பயங்கரவாத அமைப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தலிபான் பயங்கரவாத அமைப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் (படம்) கூறியதாவது:
ஆப்கன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். எனினும், அது வெறும் பூர்வாங்க பேச்சுவார்த்தையே ஆகும்.
அந்தப் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றார் அவர்.
முன்னதாக, அமெரிக்கப் பிரதிநிதி ஸல்மே கலீல்ஸாதுடன் ஆப்கன் தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகள் கத்தாரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகும், ஆப்கானிஸ்தானில் இன்னும் சுமார் பாதி இடங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.