மியான்மர்: அகதிகள் முகாமில் துப்பாக்கிச் சூடு
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில், ரோஹிங்கயா சிறுபான்மையினருக்கான அகதிகள் முகாமில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்ததாக தகவல்கள்
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில், ரோஹிங்கயா சிறுபான்மையினருக்கான அகதிகள் முகாமில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த முகாமிலிருந்த அகதிகள் தப்பிச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட மோதலில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, முகாமில் அமைதி காக்கும்படி இரு தரப்பினரையும் ஐ.நா. கோரியுள்ளது.
ராக்கைன் மாகாணத்தின் தலைநகர் சிட்வேவுக்கு அருகே கடந்த 2012-ஆம் ஆண்டு கலவரத்துக்குப் பிறகு இந்த முகாமில் 1.2 லட்சம் ரோஹிங்கயா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.