FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பறக்கும் விமானத்தில் இருந்து விழுந்து இறந்த வாலிபர்: லண்டனில் அதிர்ச்சி

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கென்ய இளைஞர் ஒருவர் பறக்கும் விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி 2020, 1:38 pm IST
பகிர்:

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கென்ய இளைஞர் ஒருவர் பறக்கும் விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவிற்குச் சொந்தமான கென்யா ஏர்வேஸ் நிறுவன விமானம் ஒன்று நைரோபி நகரத்திலிருந்து, லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தது. அந்த விமானமானது லண்டன் வான்பரப்பில் பயணம் செய்த போது,  கிளாபம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக குறிப்பிட்ட தோட்டத்தின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

விசாரணை நடத்திய அதிகாரிகள் குறிப்பிட்ட விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் ஒரு பை, தண்ணீர் மற்றும் உணவுப் பொட்டலத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அந்த இளைஞர் அங்கேயே ஒளிந்துகொண்டு பயணித்து நடுவானில் விமானத்திலிருந்து விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

அந்த கென்யா வாலிபரை குறித்து கண்டறிய உதவுமாறு கென்யா உயர் அதிகாரிகளிடம் லண்டன் காவல்துறையினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments