கேட்கவே கூசும் கொச்சையான வார்த்தைகளை உதயநிதி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது: தமிழிசை
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் பேச்சுக்கு, தமிழிசை கண்டனம்.
திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், கேட்கவே கூசும் கொச்சையான வார்த்தைகளை உதயநிதி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
இந்தக் கூட்டத்தில் முதல்வர், சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து, உதயநிதி ஸ்டாலின் கடுமையாகப் பேசினார்.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழக அரசியலில் சிலர் பேசும் கருத்துக்கள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இன்று, காவிரி போராட்டத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றோ தமிழ்நாட்டிற்கான உரிமை கிடைக்கவில்லை என்றோ எந்தவித கவலையும் இல்லாமல்.. கேட்கவே கூசும் அளவிற்கு கொச்சையான வார்த்தைகளை. முதல்வர் சி. ஜோசப் விஜய்யை விமர்சிக்கிறோம் என்ற பெயரில்.. மோசமான உள்ளர்த்தம் கொண்ட வார்த்தைகளைப் பேசியிருப்பது கட்சி எல்லை கடந்து அனைவரும் கண்டிக்கத்தக்கது.
எவ்வளவு மாற்றுக்கருத்துகள் மாற்று சிந்தனைகள் இருந்தாலும்... விமர்சிக்கும் பொழுது சிந்தனையில் ஒரு தூய்மை தேவை. சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால்.. அது திமுகவிற்கு நல்லதல்ல.. அவர்கள் தரம் உயரும் என்று எதிர்பார்ப்பதிலும் நியாயம் இல்லை என்றே தோன்றுகிறது.
அரசியல் நாகரிகத்தையும் பேச்சு நாகரிகத்தையும் கடைப்பிடிப்பதே மக்கள் விரும்பும் நாகரிகம். மோசமாக விமர்சனம் செய்துவிட்டு சிறையில் இருப்பதையும் ஊழல் செய்துவிட்டு சிறை செல்வதையும் பெருமை என்று நினைக்கும் இவர்களிடம் வேறு எதைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும்?” என்று குறிப்பிட்டுள்ளார்.
Senior BJP leader Tamilisai Soundararajan has criticized Udhayanidhi for using crude language shocking to even hear during a protest organized by the DMK.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.