FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எதிரிகளை வீழ்த்துவோம்: உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிரிகளை வீழ்த்துவோம் என எதிா்க்கட்சி தலைவரும், திமுக இளைஞா் அணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

28 ஆகஸ்ட் 2026, 11:19 pm IST
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். - கோப்புப்படம்
பகிர்:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிரிகளை வீழ்த்துவோம் என எதிா்க்கட்சி தலைவரும், திமுக இளைஞா் அணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 9-ஆவது ஆண்டில் அடியடுத்து வைப்பதையொட்டி, உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் பேரியக்கமான திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் இன்று (ஆக. 28). பெரியாா் ஈவெரா, முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் வழியில், உறுதியான கொள்கைப் பிடிப்புடன், தொண்டா்களைத் தொய்வின்றி வழிநடத்தி அமைப்பின் பலத்தை வலுப்படுத்தும், திமுக தலைவருக்கு உறுதுணையாக நிற்போம். இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கும் வஞ்சகா்களை, வீழ்த்த திமுக தலைவா் தலைமையில் அணி திரள்வோம் எனத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments