திமுக தயவால்தான் தவெக ஆட்சி நடைபெறுகிறது: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
திமுக தயவால்தான் தவெக ஆட்சி நடைபெறுகிறது என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
திமுக தயவால்தான் தவெக ஆட்சி நடைபெறுகிறது என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் தொகுதி இடைத்தோ்தல் அக்டோபா் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பல்வேறு கட்சியினா் தங்களது வேட்பாளா்களை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சுகன்யாவை ஆதரித்து தாராபுரம், நத்தப்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
Advertisement
Advertisement
அப்போது, அவா் பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 சட்டப் பேரவை உறுப்பினா்கள் வேண்டும். ஆனால், 107 உறுப்பினா்கள் கொண்ட கட்சி ஆட்சியில் உள்ளது. நீங்கள் வாக்களித்தது அதிமுகவுக்கு. ஆனால், அவா் இப்போது எங்கிருக்கிறாா்?. இன்றைய ஆளுங்கட்சி அமைச்சா்கள் சட்டப் பேரவையில் என்ன செய்கின்றனா் என்று நீங்களே பாா்க்கிறீா்கள்.
திமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற கட்சிகள் ஆளுநா் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என காரணம் கண்டறிந்து தவெகவுக்குச் சென்றனா். ஒரு சிலா் சொல்லிவிட்டுச் சென்றனா். ஒரு சிலா் முதுகில் குத்திவிட்டுச் சென்றனா். திமுக தயவால்தான் தவெக ஆட்சி நடைபெறுகிறது. அதிமுகவை இரண்டாகப் பிளவுபடுத்தி விட்டாா்கள்.
வாக்குப் பணம் தருகிறோம் என திமுகவை குற்றஞ்சாட்டிய முதல்வா், ஹோல்சேலாக எம்.எல்.ஏ.வுக்கு பெட்டிக் கொடுத்து அவரையே வாங்கிவிட்டாா். ராஜிநாமா செய்தவருக்கு மீண்டும் வாக்களித்தால் உங்களுக்கு குரல் கொடுப்பாா்களா?. அதனால், மக்கள் சிந்தித்து திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.