நெல் விளைச்சலில் சாதனை: ஒரு ஹெக்டருக்கு 18 டன்!
சீனாவில் சூப்பர் நெல் ஆய்வுத் திட்டப்பணி மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
சீனாவில் சூப்பர் நெல் ஆய்வுத் திட்டப்பணி மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. சோதனை நெல் விளைச்சலில், இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு ஹெக்டருக்கு 18 டன் நெல் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கலப்பின நெல்லின் தந்தை என அழைக்கப்படும் யுவான் லுங்பிங், ஹுனான் மாநிலத்தில் செப்.5-ம் தேதி இதைத் தெரிவித்தார்.
1996-ம் ஆண்டு முதல் சூப்பர் நெல் திட்டப்பணி மேற்கொள்ளத் துவங்கப்பட்டது. இதுவரை 5 கட்ட இலக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. யுவான் லுங்பிங், சீனாவின் குடியரசுப் பரிசுக்கான 8 வேட்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.