திருப்பரங்குன்றம்: போலீசாருடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!
திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு...

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதனை பக்தர்கள் காணலாம் என உத்தரவிட்ட நிலையில் சனிக்கிழமை காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் மலைக்குச் செல்ல தொடங்கினர்.
இந்நிலையில் காலை 11 மணி அளவில் காவல்துறையினர் மலைக்குச் செல்லும் பக்தர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பக்தர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
போலீசார். சிஆர்பிஎஃப் வீரர்கள் வந்து திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை கையில் எடுத்தவுடன், பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.
எனினும் தொடர்ந்து பக்தர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்போது பக்தர்கள் மீண்டும் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.