முகப்பு

திருப்பரங்குன்றம் தீபம்: மதுரை வந்தடைந்த முன்னாள் நீதிபதிகள்!

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோர் மதுரை வந்தடைந்தனர்.

திருப்பரங்குன்றம் தீபம்: மதுரை வந்தடைந்த முன்னாள் நீதிபதிகள்!
மதுரை வந்தடைந்த முன்னாள் நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் - DIN
பகிர்:

மதுரை திருப்பரங்குன்றம் மலைத் தூணில் இன்று தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில் நிர்வாக பொறுப்பேற்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோர் மதுரை வந்தடைந்தனர்.

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரத்தில் தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் நேற்றைய வழக்கின் விசாரணையில் கடும் கண்டனம் தெரிவித்தது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று (நவ. 28, சனிக்கிழமை) தீபம் ஏற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அறங்காவலா் குழு செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் - வி. பார்த்திபன் குழுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தது.

Advertisement

Advertisement

மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை, தீபத் தூண், தா்கா உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் இன்று சிஆா்பிஎஃப் கட்டுப்பாட்டில் வந்தது.

மதுரை திருப்பரங்குன்றம் மலைத் தூணில் இன்று தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது மலை மீதுள்ள தூணை சுற்றிலும் கம்புகள் கட்டப்படுகின்றன

இதனிடையே, திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் பணி தொடர்பாக நிர்வாக பொறுப்பேற்க, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோர் சென்னையில் இருந்து இன்று காலை மதுரை வந்தடைந்தனர்.

summary

Thiruparankundram Deepam: Former judges arrive in Madurai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.