FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிஆன் நகரில் பயணம் மேற்கொண்டார் ஷி ஜின்பிங்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் 22ஆம் நாள் சிஆன் நகரில் பயணம் மேற்கொண்டார்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் 22ஆம் நாள் சிஆன் நகரில் பயணம் மேற்கொண்டார்.

இப்பயணத்தின் போது ஷாஅன் சி வாகனத் தொழில் தொழில் நிறுவனம், சி ஆன் ஜியாவ்தொங் பல்கலைக்கழகம், பிரகாசமான டாத்தாங் நடை வீதி ஆகியவற்றைப் பார்வையிட்ட அவர், தொழில் நிறுவனங்கள் வேலைக்குத் திரும்பியது மற்றும் பொது மக்களின் வாழ்க்கை இயல்பான ஒழுங்கிற்கு திரும்பியது பற்றி அறிந்து கொண்டார்.

ஷாஅன் சி வாகனத் தொழில் நிறுவனம் சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய தயாரிப்புத் தொழில் நிறுவனமாகும். அது, தூய்மையான எரியாற்றல், புதிய எரியாற்றல், வணிக நோக்கிற்கான நுண்மதி இணைய வாகனம் முதலிய துறைகளில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனமானது, 220க்கும் மேலான சிறப்பு அறிவுசார் காப்புரிமைகளைக் கொண்டத் தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

கரோனா தொற்றின் காரணமாக வெறிச்சோடிக் கிடந்த பிரகாசமான டத்தாங் வீதியானது, தற்போது மீண்டும் சுறுசுறுப்பாக மாறியுள்ளது. 22ஆம் நாளிரவு, இவ்வீதியைப் பார்வையிட்ட ஷிச்சின்பிங், இவ்வீதியில் இயங்கி வரும் கடைகள் இயல்புக்குத் திரும்பியது குறித்த நிலைமையை அறிந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments