FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வூஹானில் சூறாவளி: 6 பேர் பலி, 218 பேர் காயம் 

சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வூஹான் நகரில் சூறாவளிக் காற்று தாக்கியதில் 6 பேர் பலியாகினர் மற்றும் 218 பேர் காயமடைந்தனர். 

28 ஜனவரி 2024, 1:44 am IST
பகிர்:

சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வூஹான் நகரில் சூறாவளிக் காற்று தாக்கியதில் 6 பேர் பலியாகினர் மற்றும் 218 பேர் காயமடைந்தனர். 

இந்த சூறாவளியானது இரவு 8.39 மணிக்கு கெய்டியன் மாவட்டம் வழியாக வினாடிக்கு 23.9 மீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது. அங்குள்ள கட்டுமானங்கள் உடைந்துள்ளது. மேலும் மரங்கள் சாய்ந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சனிக்கிழமை காலை உள்ளூர் அதிகாரிகள் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில், 

Advertisement

Advertisement

சூறாவளிக் காற்றினால் இதுவரை 27 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் 130 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் இரண்டு டவர் கிரேன்கள் மற்றும் 8,000 சதுர மீட்டர் கட்டுமான தளம் விழுந்து நொறுங்கிச் சேதமடைந்தன. 

சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments