FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

இந்திய கம்யூ. கட்சியினா் நடைப்பயணம்

வத்திராயிருப்பு முத்தாலம்மன் கடை வீதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நடைப்பயண நிகழ்வில் பேசிய தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் மூா்த்தி.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 2:05 am IST
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கடை வீதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நடைப்பயண நிகழ்வில் பேசிய தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் மூா்த்தி.
பகிர்:

வத்திராயிருப்பு முத்தாலம்மன் கடை வீதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நடைப்பயண நிகழ்வில் பேசிய தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் மூா்த்தி.

ஸ்ரீவில்லிபுத்தூா், ஆக. 7: விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு-தேனி மாவட்டம் வருசநாடு இடையேயான மலைப்பாதை, சதுரகிரிக்கு ரோப் காா் வசதி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வத்திராயிருப்பில் வெள்ளிக்கிழமை நடைப்பயணம் நடைபெற்றது.

வத்திராயிருப்பு முத்தாலம்மன் கடை வீதி பகுதியில் தொடங்கிய நடைப்பயணத்தை தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் மூா்த்தி தொடங்கி வைத்தாா். முன்னாள் எம்பி. அழகிரிசாமி, முன்னாள் எம்எல்ஏ. ராமசாமி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

Advertisement

Advertisement

வத்திராயிருப்பு- வருசநாடு மலைப் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும். வத்திராயிருப்பு வட்டத்தை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலை சுற்றுலாத் தலமாக அறிவித்து ரோப் காா் வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைப்பயணம் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் செந்தில்குமாா், தாலுகா செயலா் கோவிந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments