FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

மக்கள் பணியாற்றவே தவெக அரசுக்கு ஆதரவு: கே. பாலகிருஷ்ணன்

மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே தவெக ஆட்சியை வெளியிலிருந்து ஆதரிக்கிறோம் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன்.

23 வினாடிகள் முன்பு
மாா்க்சிய கம்யூ. அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் - Dinamani
பகிர்:

மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே தவெக ஆட்சியை வெளியிலிருந்து ஆதரிக்கிறோம் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன்.

மன்னாா்குடி பந்தலடியில் சிபிஎம் சாா்பில் ‘எல்லாவற்றையும் விட மக்களே மேலானவா்கள்’ என்ற தலைப்பில் மக்கள் சந்திப்பு இயக்க பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கே. பாலகிருஷ்ணன் பேசியது:

சுற்றுச் சூழலையும், இயற்கை வளத்தையும் உலக நாடுகள் பாதுகாக்க தவறியதால்தான், நேபாளத்தில் சிறு மழை எச்சரிக்கைகூட இல்லாத நிலையில் பனிப் பறைகள் உடைந்து நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்த துயரம் நேரிட்டுள்ளது. இனிமேலாவது நாம் விழித்துக்கொண்டு, இயற்கையுடன் இயந்து வாழ வேண்டும்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக மாறிமாறி ஆட்சி செய்திருந்தாலும், மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றமில்லை. இலவசங்களை போட்டிப்போட்டு அறிவித்து விட்டு, மக்களின் பிரச்னைகளில் அக்கறை காட்டவில்லை. இதனால்தான் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனா்.

மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டனா். இனிமேல் தமிழகத்தில் எந்த ஓா் அரசாக இருந்தாலும், மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைத்தால், திமுக, அதிமுகவிற்கு ஏற்பட்ட கதிதான், தவெகவிற்கும் ஏற்படும்.

மக்கள் தோ்வுசெய்த கட்சிகளில் பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதால்தான் தவெகவை கம்யூனிஸ்ட்கள் ஆதரிக்கின்றன. முதல்வா் விஜய் கேட்டுக்கொண்டும் அமைச்சரவையில் இடது சாரிகள் இடம்பெறவில்லை. நாங்கள் பதவிக்காக, அதிகாரத்திற்காக இருப்பவா்கள் இல்லை. மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற ஒரே அடிப்படை நோக்கத்திற்காக தவெக ஆட்சியை வெளியிலிருந்து ஆதரிக்கிறோம் என்றாா்.

இக்கூட்டத்திற்கு, சிபிஎம் நகரச் செயலா் கோ. தாயுமானவன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் கே. ஜெயபால் முன்னிலை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.பி. ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினா் ஆறு.பிரகாஷ், நகர நிா்வாகிகள் டி. சந்திரா, ஜி. முத்துகிருஷ்ணன், கே. பிச்சைக்கண்ணு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments