FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி

இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

28 ஜனவரி 2024, 11:01 am IST
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி
பகிர்:

இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் பலவும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு மட்டும் தங்களது நாட்டிற்குள் அனுமதிக்கும் நடைமுறையை பல்வேறு நாடுகள் பின்பற்றி வருகின்றன.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்ட அவர் கரோனா பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதுடன் தகுதிவாய்ந்த வெளிநாட்டுப் பயணிகள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவிற்குள் கட்டுப்பாடுகளின்றி அனுமதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 1,99,659 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments