உலகம்

சர்வதேச பயணிகளுக்கு கரோனா சோதனை: சீனா கடும் விமரிசனம்

DIN

புது தில்லி: சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யும் இந்திய, ஜப்பான் நாடுகளின் முடிவுக்கு சீனா கடும் விமரிசனத்தை முன் வைத்துள்ளது.

சீனா அரசின் ஊடகம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்வது என்று இந்தியா, ஜப்பான் முடிவு செய்திருப்பது, சுய ஆறுதல் மட்டுமே என்று தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த கரோனா பேரிடர் காலத்தில் பயன்படுத்திய முறைகளையே தற்போதும் பின்பற்றுவது உண்மையில் எந்த பயனையும் அளிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளையில், இந்தியா ஒமைக்ரானின் திரிபு வைரஸ் பிஎஸ்.7-ஐ கண்டறிந்து அது பாதித்த நோயாளிகளை தனிமைப்படுத்துவதை வெற்றிகரமாக செய்து வருவதோடு, ஒரு புதிய திரிபு எந்த வகையில் செயல்படுகிறது என்ற ஆய்வையும் மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வது தொடர்பான முடிவை எடுப்பது குறித்து பிரிட்டனும் ஆலோசித்து வருகிறது.

ஏற்கனவே, சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என்பதை அமெரிக்கா புதன்கிழமை அறிவித்துவிட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT