முகப்பு
உலகம்

சிகாகோவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி, 8 பேர் காயம்

சிகாகோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Updated On : 20 மே 2022, 5:05 pm IST
பகிர்:

சிகாகோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நகரின் மாக்னிஃபிசென்ட் மைல் ஷாப்பிங் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மெக்டொனால்டு உணவகத்திற்கு அருகே வியாழன் இரவு 10.40 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 

இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  அவரிடமிருந்து ஆயுதம் ஒன்றை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

சமீப வருடங்களாக நகரில் கொடிய வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் சிகாகோ நகரின் மில்லேனியம் பூங்காவில் நடந்த பயங்கரத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு இளம்பெண் பலியானர். 

வியாழன் அன்று நடத்தப்பட்டத் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் பெயர்களையோ, வயதையோ காவல்துறை உடனடியாக வெளியிடவில்லை.

இதுதொடர்பாக மேலும் அப்பகுதியில் விசாரணை நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.