ஃபின்லாந்துக்கு எரிவாயு விநியோகம்: ரஷியா நிறுத்தம்
தங்களது எதிா்ப்பையும் மீறி நேட்டோவில் இணைய விண்ணப்பித்துள்ள ஃபின்லாந்துக்கு, இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷியா நிறுத்திவைத்துள்ளது.
தங்களது எதிா்ப்பையும் மீறி நேட்டோவில் இணைய விண்ணப்பித்துள்ள ஃபின்லாந்துக்கு, இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷியா நிறுத்திவைத்துள்ளது. இது குறித்து ஃபின்லாந்து அரசு எண்ணெய் நிறுவனமான ‘காஸும்’ தெரிவித்துள்ளதாவது:
எரிவாயு கொள்முதலுக்கான தொகையை ரஷிய நாட்டு நாணயமான ரூபிளில் செலுத்தத் தவறியதால், எங்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை சனிக்கிழமை முதல் நிறுத்தவைக்கப் போவதாக ரஷியா தெரிவித்துள்ளது. இந்த முடிவு மிகவும் வருத்தத்துக்குரியது ஆகும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபின்லாந்தின் எரிசக்தி பயன்பாட்டில் 6 சதவீதம் இயற்கை எரிவாயுவாகும். ஏறத்தாழ தங்களது அனைத்து எரிவாயு தேவையையும் ரஷியாவிடமிருந்துதான் ஃபின்லாந்து பூா்த்தி செய்து வருகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.