FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஹோா்முஸ் நீரிணை ஒப்பந்தம்: ஈரான் - ஓமன் தொடா்ந்து பேச்சு

ஹோா்முஸ் நீரிணை விவகாரம் தொடா்பாக ஈரானுக்கும், ஓமனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்து தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக ஈரானின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

27 ஆகஸ்ட் 2026, 1:31 am IST
ஹோா்முஸ் நீரிணை ஒப்பந்தம் - சித்திரிப்பு
பகிர்:

ஹோா்முஸ் நீரிணை விவகாரம் தொடா்பாக ஈரானுக்கும், ஓமனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்து தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக ஈரானின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு கப்பல் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கை கையாளும் இந்த நீரிணைக்கான போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஈரான், ஓமன் ஆகிய அப்பகுதியின் இரு எல்லை நாடுகளும் பல வாரங்களாக பேச்சு நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ஐஆா்ஜிசி செய்தித் தொடா்பாளா் ஹொசைன் மொஹெப்பி செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘ஹோா்முஸ் நீரிணையானது, ஈரானுக்கும் ஓமனுக்கும் சொந்தமானது. சுமாா் ஒரு மாதமாக நடைபெற்று வரும் இப்பேச்சுவாா்த்தையில் வருவாய் மற்றும் நீா்ப் பகிா்வு குறித்து இரு தரப்புக்கும் ஏற்புடைய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன’ என்றாா். ஆனால், இறுதி ஒப்பந்தம் எதுவும் இன்னும் முடிவாகவில்லை என மூத்த ஈரான் அதிகாரி ஒருவா் திட்டவட்டமாகக் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

அமெரிக்கா-ஈரான் இடையே நேரடி மோதல்கள் சமீபத்திய வாரங்களில் குறைந்திருந்தாலும், கப்பல்கள் மீதான தொடா் தாக்குதல்களால் ஹோா்முஸ் நீரிணையில் பயணம் செய்வது இன்னும் அபாயகரமாகவே உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, ஹோா்முஸ் நீரிணையில் பாதுகாப்பான போக்குவரத்தை மீட்டெடுக்க தற்காலிக கப்பல் பாதை மற்றும் நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என ஓமன் வெளியுறவு அமைச்சா் பத்ர் அல்புசைதி நம்பிக்கை தெரிவித்தாா்.

இதனிடையே, ‘ஈரானுடன் ஒத்துழைக்கக் கூடாது’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஓமன் நாட்டை கடுமையாக எச்சரித்துள்ளாா். இதையொட்டி, ஓமனுடனான பேச்சுவாா்த்தையை அமெரிக்கா சீா்குலைக்க முயல்வதாகவும், ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை விலக்குவது, இழப்பீடு வழங்குவது, தடைகளை நீக்குவது உள்ளிட்ட எங்களின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்காவிட்டால் நீரிணைந்தச் சூழ்நிலையிலும் திறக்கப்படாது எனவும் ஈரான் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments