ஈரானிய ‘ட்ரோன்’கள் மூலம் கீவில் தாக்குதல்
உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் ஒடெசா பிராந்தியங்களில் ரஷியா தீவிர தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
ஈரானில் தயாரிக்கப்பட்ட, தன்னைத் தானே அழித்துக்கொள்ளக்கூடிய ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் ஒடெசா பிராந்தியங்களில் ரஷியா தீவிர தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
ரஷியாவால் கடந்த 2014-இல் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைனின் கிரீமியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான பாலத்தில் சனிக்கிழமை லாரி குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அதனை உக்ரைன்தான் நிகழ்த்தியதாக குற்றம் சாட்டும் ரஷியா, அதற்குப் பதிலடியாக அந்த நாட்டில் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.