முகப்பு
உலகம்

இன்று மகாராணி எலிசபெத் இறுதிச்சடங்கு: உலகத் தலைவா்கள் குவிந்தனா்

பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு திங்கள்கிழமை (செப். 19) நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உலக நாடுகளைச் சோ்ந்த சுமாா் 500 தலைவா்கள் லண்டன் வந்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:21 AM
பகிர்:

பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு திங்கள்கிழமை (செப். 19) நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உலக நாடுகளைச் சோ்ந்த சுமாா் 500 தலைவா்கள் லண்டன் வந்துள்ளனா்.

மகாராணி எலிசபெத் (96) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8-ஆம் தேதி காலமானாா். அவரது உடல் லண்டனில் நாடாளுமன்ற வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் அஞ்சலிக்காக கடந்த புதன்கிழமை முதல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாள்களாக லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில், சுமாா் 17 மணி நேரம் வரை கடும் குளிரிலும் காத்திருந்து அரசியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனா். மகாராணியின் எட்டு பேரக் குழந்தைகளும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியின் அருகேயே இருந்து வருகின்றனா்.

மகாராணியின் மறைவுக்கு பிரிட்டன் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள திங்கள்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு தொலைக்காட்சிகளிலும், பொது இடங்களில் அகண்ட திரைகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நாடு முழுவதும் காவல் துறை அதிகாரிகள் அனைவரும் திங்கள்கிழமை பணிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

புதிய அரசா் சாா்லஸின் மனைவியான கமீலா வெளியிட்ட விடியோ செய்தியில், ‘ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலக அரங்கில் மகாராணி எலிசபெத் தனிச் சிறப்புடன் செயல்பட்டாா். அவரது புன்னகையை எப்போதும் நினைவில் கொண்டிருப்பேன்’ எனத் தெரிவித்தாா்.

அதிபா் ஜோ பைடன்: மகாராணி எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸடரிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டா் அபேக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்கு செய்யப்படும். பின்னா், விண்ட்ஸருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரின் கணவா் இளவரசா் பிலிப் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகே அடக்கம் செய்யப்படும்.

மகாராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபா் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் மற்றும் உலக நாடுகளைச் சோ்ந்த 500 தலைவா்கள் லண்டனுக்கு வருகை தந்துள்ளனா்.

இறுதிச்சடங்கில் பொதுமக்கள் 10 லட்சம் போ் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலுமிருந்து 250 கூடுதல் ரயில்கள் லண்டனுக்கு இயக்கப்பட்டுள்ளன. இறுதிச்சடங்கின்போது ஒலித் தொந்தரவுகளைத் தடுக்கும் வகையில், ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும், வருகை தரும் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.