சொந்த விண்வெளி நிலையத்துக்கு ஆய்வகக் கலம் அனுப்பியது சீனா
சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கான முதல் ஆய்வகக் கலத்தை அந்த நாடு வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தியது.
சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கான முதல் ஆய்வகக் கலத்தை அந்த நாடு வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தியது.
பிரம்மாண்டமான லாங் மாா்ச்-5பி ஒய்3 ராக்கெட் மூலம் ‘வென்டியன்’ என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த ஆய்வுக் கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தியாங்காங் விண்வெளி நிலையத்தின் மையக் கலமான தியான்ஹேவுக்கு இடா்கால மாற்றாகவும் மற்ற நேரங்களில் சக்திவாய்ந்த ஆய்வகமாகவும் வென்டியன் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் தியான்ஹே மையக் கலம் முதல்முறையாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படத் தொடங்கும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.