பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் இம்ரான் கான் காயம்!
பாகிஸ்தான் பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-எ-இன்சாஃப் கட்சி (பிடிஐ) தலைவருமான இம்ரான் கான், வாஸிராபாத் நகரின் ஸாபர் அலி கான் சவுக் பகுதியில் பேரணியில் ஈடுபட்டிருந்த போது, அவர் இருந்த கண்டெய்னர் லாரி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில், இம்ரான் கானின் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக அவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த துப்பாக்கிச்சூட்டில் பலரும் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.