எகிப்து: கால்வாயில் கவிழ்ந்த பேருந்து , 21 பேர் பலி
எகிப்து நைல் நதியின் டெல்டா பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எகிப்து நைல் நதியின் டெல்டா பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரி டாக்டர்.ஷெரீஃப் மக்கீன் கூறியதாவது: இந்த விபத்து எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு 100 கிலோமீட்டர் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள தக்லியா மாகாணத்தில் நடந்துள்ளது. விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மற்ற பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதையும் படிக்க: ரகசிய திருமணம்: தேனிலவு கொண்டாடும் உலக அழகிகளின் புகைப்படங்கள் வைரல்
Advertisement
Advertisement
இந்த விபத்து குறித்து காவல் துறை அதிகாரி முஹமது ஹாதி கூறியதாவது: பேருந்தின் ஓட்டுநர் ஸ்டியரிங் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம். இது போன்ற விபத்துகள் எகிப்தில் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. வேகமாக வாகனங்களை இயக்குவதே விபத்திற்கான முக்கிய காரணமாக உள்ளது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.