முகப்பு
உலகம்

உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகள்

ரஷியாவை எதிா்த்துப் போரிடுவதற்காக உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகளை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பியுள்ளன.

Updated On : 28 ஏப்ரல் 2023, 12:55 am IST
பகிர்:

ரஷியாவை எதிா்த்துப் போரிடுவதற்காக உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகளை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பியுள்ளன.

இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் வியாழக்கிழமை கூறியதாவது:

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆயுத தளவாடங்களை வழங்கி உதவுவதாக நேட்டோ உறுப்பு நாடுகள் வாக்குறுதி அளித்திருந்தன. அந்த வாக்குறுதில் கூறப்பட்டிருந்த 98 சதவீத தளவாடங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுவிட்டன.

Advertisement

Advertisement

அந்த நாட்டுக்கு இதுவரை 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகளை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பியுள்ளன.

இது மட்டுமின்றி, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரா்களுக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் பயிற்சி அளித்துள்ளன.

இந்த உதவிகள் மூலம் ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் நாட்டுப் பகுதிகளை மீட்கும் நடவடிக்கைகளில் உக்ரைனுக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்றாா் அவா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

அதனையும் மீறி நேட்டோ அமைப்பில் இணைய வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் அமெரிக்காவும், பிற நேட்டோ உறுப்பு நாடுகளும் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

மேலும், உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்கிகள், எறிகணைகள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பி வருகின்றன.

இதன் மூலம் உக்ரைன் போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாகப் பங்கேற்பதாகவும், இது உக்ரைன் போரை நேட்டோவுக்கும் தங்களுக்கும் இடையிலான, அணு ஆயுத மோதல் அபாயம் நிறைந்த போராக விரிவுபடுத்தும் என்று ரஷியா எச்சரித்து வருகிறது.

மேலும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிப்பது இந்தப் போருக்கு தீா்வை ஏற்படுத்தாது; அதற்குப் பதிலாக கூடுதல் இழப்பைத்தான் அதிகரிக்கும் என்று ரஷியா கூறி வருகிறது.

அத்துடன், கடைசி உக்ரைன் வீரா் உயிரிழக்கும் வரை அந்த நாட்டுக்கு ஆயுதம் அனுப்பும் கொள்கையை மேற்கத்திய நாடுகள் கடைப்பிடிப்பதாக ரஷியா குற்றம் சாட்டி வருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகளை தங்களது அமைப்பின் உறுப்பு நாடுகள் அனுப்பியுள்ளதாக நேட்டோ பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments